தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிடமாற்றம்: தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்.பி.யாக நியமனம், கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் சிலை கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்கள். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவளி ப்ரியா தமிழ்நாடு சீருடை பணியாள்ர் தேர்வு வாரியத்தின் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.

Related Stories: