ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட 4-வது  நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து கடந்த ஜன.29-ம் முதல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் கடந்த ஜன.29-ம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெற்று சென்றனர். மொத்தம் 48 பேர் வேட்பு மனுக்களை பெற்று சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜன.31 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதன்படி முதல் 3 நாட்களில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 4-ம் நாள் வேட்புமனு தாக்கல் இன்று 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: