வாய்ஜாலம் காட்டும் ஒன்றிய அரசு பட்ஜெட்: தொல். திருமாவளவன் கண்டனம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை: இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது குடியரசு தலைவர் உரையிலும் பொருளாதார ஆய்வறிக்கையிலும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிய ஒன்றிய பாஜ அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அதே ஏமாற்று வேலையை தொடர்ந்துள்ளது. ஒன்றிய நிதியமைச்சரின் அறிவிப்பால், ரு2 கோடிக்குமேல் வருட வருமானம் உள்ளவர்களே பயனடைவர். மாத சம்பளம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு ஒன்றிய அரசின் பட்ஜெட்டினால் எவ்வித பயனும் கிடைக்காது.

ஒட்டுமொத்தமாக, ஒன்றிய அரசின் பட்ஜெட், வெகுஜன மக்களுக்கு எதிரானது. வேலைவாய்ப்பையோ, விலைவாசியை குறைக்கவோ உதவாத பட்ஜெட். இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு எவ்விதத்திலும் உதவாத பட்ஜெட். வாய்ஜாலம் மூலமாக மக்களை ஏமாற்ற நினைக்கும் மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கிறேன்.

Related Stories: