பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளில் தமிழ்நாட்டை மேதினியில் உயரக்கொண்டு செல்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள். தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம். தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: