ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு? அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது: சசிகலா பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது என சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 54ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது. அதிமுகவை முழுமையாக புரிந்து கொண்டால் பாஜகவை தேடி செல்லும் தவறுகள் நடக்காது. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். தனித்தனியாக இருந்து செயல்படுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல; அதைத்தான் சொல்ல முடியும் இவ்வாறு கூறினார்.

Related Stories: