புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கிய 23 நிமிடங்களில் முடிவடைந்தது: அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கிய 23 நிமிடங்களில் முடிவடைந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் காலை 10.53 மணிக்கு முடிவடைந்தது.

புதுச்சேரி சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட சபையை 6 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்று விதித்துள்ளது. அதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ள நிலையில், புதுவை சட்டசபை இன்று கூடியது.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து தொடர்பாக அரசின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார். இதற்கு உரிய பதிலை தெரிவிக்காத புதுச்சேரி முதல்வரை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அரசு துறைகளின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல்  தரப்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரி சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: