சொத்துவரி செலுத்த தவறினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி உரிமையாளர்களால் சொத்துவரி செலுத்தப்பட

வேண்டும். தற்போது மாநகராட்சிக்கு சொத்துவரி ரூ.50 ஆயிரத்திற்குள் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களின் எண்ணிக்கை சுமார் 5.93 லட்சமாக உள்ளது. இந்த வகையில், உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவைத் தொகை ரூ.346.63 கோடி உள்ளது. சொத்து வரி செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்துகள் மீது சென்னை மாநகராட்சியால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக பெறப்பட்டு வரும் சொத்துவரி மூலம் சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. எனவே,  நடப்பு நிதி ஆண்டு (2022-23) முடிவடைய இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சொத்துவரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள்  சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியை உடனடியாக செலுத்தி, சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: