சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்

நெல்லை: தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோல் தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு மாணவர் சேர்க்கைக்கு முதற்கட்ட கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. இதில் அரசுக்கல்லூரிகளில் 24 சித்தா இடங்களும், 3 ஆயுர்வேத இடங்களும், 7 ஓமியோபதி இடங்களும், 27 யுனானி இடங்களும் காலியாக உள்ளன. இதுபோல் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பல காலியாக உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் 127 இடங்கள் நிரம்ப வேண்டியிருக்கிறது. இந்த இடங்களை 2ம் சுற்று கலந்தாய்வில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டதும், அடுத்த வாரம் மற்ற இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதையடுத்து முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை வருகிற 20ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: