குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்த போது தொழிலதிபர் வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு: வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

சென்னை: குடும்பத்துடன் பெங்களூரு சென்று இருந்த போது, தொழிலதிபர் வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோன சம்பவத்தில், வேலைக்காரர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடபழனி காவல் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குயிடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த் (54). தொழிலதிபரான இவர், கடந்த மாதம் 23ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். இவது வீட்டில் டிரைவர்கள், வேலைக்காரர்கள் என 4 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களிடம் வீட்டின் சாவி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் பூஜை அறையை திறந்து, சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு வைத்திருந்த 2 வெள்ளி குத்துவிளக்குகள், பூஜை பொருட்கள், தட்டு என 25 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. ஆனால், பீரோவில் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் அப்படியே இருந்துள்ளது. கொள்ளையர்கள் யாரேனும் வந்து இருந்ததால் அனைத்து பொருட்களும் மாயமாகி இருக்கும். ஆனால், வெளியாட்கள் யாரும் வராத நிலையில், வெள்ளி பொருட்கள் மட்டும் மாயமாகி இருந்ததால் சந்தேகமடைந்த தொழிலதிபர் ஆனந்த், வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர், வேலைக்காரர்கள் என 4 பேரிடம் விசாரணை நடத்தினார்.

ஆனால் மாயமான வெள்ளி பொருட்கள் குறித்து அவர்கள் உரிய பதில் அளிக்க அளிக்கவில்லை. இதையடுத்து தொழிலதிபர் ஆனந்த், திருட்டு குறித்து நேற்று முன்தினம் இரவு வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வடபழனி குற்றப்பிரிவு போலீசார் தொழிலதிபர் வீட்டிற்கு சென்று அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 28ம் தேதி கார் டிரைவர் ஒருவர் மட்டும் வீட்டில் நாள் முழுவதும் இருந்தது தெரியவந்துள்ளது. அவர் உட்பட 4 வேலைக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: