சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி மற்றும் உரிமம் கட்டுவதற்கு காலம் தாழ்த்தி வந்த கடைகளை கண்டறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் மற்றும் சொத்துவரி கட்ட தவறிய 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். அப்போது, அதிகாரிகளை பார்த்ததும் சுமார் 10 கடைகள் உரிமத்தொகை கட்டுவதற்கு முன்வந்ததால் அந்த கடைகளை தவிர, மற்ற 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பிறகு  கடையின் இரும்பு ஷட்டர் மீது எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அண்ணா நகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சொத்துவரி மற்றும் உரிமம் செலுத்த கட்ட தவறிய கடைகளை கணக்கெடுத்து வருகிறோம். அதில் சொத்துவரி மற்றும் உரிமை கட்ட தவறிய கடைகளை சீல்வைக்கும் நடவடிக்கை தொடரும்’’ என்றார்.

Related Stories: