சேலம்-ஓமலூர் ரயில் பாதையின் மின்வழித்தடத்தை அதிகாரி ஆய்வு-அதிவேக ரயிலை இயக்கி சோதனை

சேலம் : சேலம்-மேட்டூர் இருவழிப்பாதை திட்டத்தில், சேலம்-ஓமலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இப்பாதையில் மின்வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை நடத்தினார். இதில், 121 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று, சேலம்-ஓமலூர் ரயில் பாதையின் மின்வழித்தடத்தை தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சித்தார்தா ஆய்வு செய்தார்.

சேலத்தில் இருந்து டிராலியில் சென்று, மின்வழித்தட கேபிள்கள், சிக்னல்கள், ஜங்ஷன் பாக்ஸ்கள் போன்றவற்றை பார்வையிட்டார். ரயில் இயக்கத்திற்கான மின்சப்ளையை மேற்கொள்ளும் டிரான்ஸ்மீட்டர்களையும் ஆய்வு செய்தார். பின்னர், ஓமலூரில் இருந்து சேலத்திற்கு புதிய பாதையில் முதன்மை தலைமை எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சித்தார்தா தலைமையிலான அதிகாரிகள் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உடனிருந்தார்.

Related Stories: