திருவாரூர் அருகே வி.சி.க. நிர்வாகி கவியரசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே வி.சி.க. நிர்வாகி கவியரசன் நேற்று கொல்லப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் காளிதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருக்கண்ணமங்கையில் வி.சி.க. நிர்வாகி கவியரசன் நேற்று 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே அம்மையப்பன் அக்கரைதெருவில் வசித்து வந்தவர் மதியழகன், இவரது மகனான கவியரசன் வி.சி.க.-வின் கிளைக்கழக பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று திருக்கண்ணமங்கையில் துக்க நிகழ்விற்காக இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று திரும்பியபொழுது திருக்கண்ணமங்கை பகுதியில் அவரை வழிமறித்து ஒரு மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்றது. இதில் கவியரசன் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டிக்கொலை செய்துவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பியோடியுது.

கவியரசன் சடலத்தை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கொலை செய்யப்பட்ட கவியரசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாஜக-வை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதில் பாஜக பிரமுகர் காளிதாஸ் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: