காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்

தாம்பரம்: தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதியில், கேட்பாரற்று கிடந்த 98 வாகனங்கள் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த 97 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு மூன்று சக்கர வாகனம் உள்பட 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டன.

இவை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலம் மூலம் ஸ்க்ரப்-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியான முறையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், நேற்று குரோம்பேட்டை காவல் நிலையத்தில், தாம்பரம் காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மற்றும் தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், மொத்தம் 8 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

Related Stories: