செல்போன் கடையில் தீ

தாம்பரம்: குரோம்பேட்டை, ராதா நகர் நாயுடு ஷாப் சாலையில், ரமேஷ் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். பூட்டியிருந்த கடையில் நேற்று அதிகாலை  புகை வந்து திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிவதைகண்டு, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சம்பவம் குறித்து தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அணைத்தனர். தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், உபரி பொருட்கள் எரிந்து நாசமானது. இன்வெர்ட்டர் மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: