கத்திமுனையில் மிரட்டி ஓட்டல் ஊழியரிடம் வழிப்பறி

சென்னை: கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (42). இவர், அசோக் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியர். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கே.கே.நகரில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த 2 பேர் பேசுவது போல் நடித்து திடீரென கத்திமுனையில் மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்தனர். அப்போது பரமசிவம் உதவி கேட்டு அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த 2 பேரும் தப்பி ஓடினர். ஆனால் பொதுமக்கள் விடாமல் ஒருவனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவல்அறிந்த கே.கே.நகர் போலீசார் பொதுமக்களிடம் இருந்து வழிப்பறி கொள்ளையனை மீட்டனர். பரமசிவம் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அசோக் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (24) என்றும், தனது நண்பரான வடபழனியை சேர்ந்த ஆகாஷ் என்பவருடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைதொடர்ந்து தினேஷ் மற்றும் ஆகாஷை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ரூ.1000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: