சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கஷ்டம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(45), சொந்த பணி காரணமாக சென்னை வந்தார். இவர் நேற்று முன்தினம் மெரினா உழைப்பாளர் சிலை அருகே இருந்து காமராஜர் சாலையை கடந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடையாறில் இருந்து மெரினா நோக்கி வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று குணசேகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
