மனிதர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் காலநிலை கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்: காலநிலைத்துறை இயக்குநர் பேச்சு

சென்னை: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த காலநிலை குறித்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என காலநிலைத் துறை இயக்குநர் தீபக் பில்கி தெரிவித்துள்ளார். காற்று மாசு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை இயக்குநர் தீபக் பில்கி தொடங்கி வைத்தார். மேலும் காலநிலை மாற்றம் குறித்த உண்மைகளை மாணவர்களுக்கு தெரிவித்தல் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் இடநெருக்கடியால் திணறும் இந்திய நகரங்களில் வாழும் மனிதர்கள் மற்றும்  பல்லுயிர்களின் வாழ்வியல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. சென்னையில் வடக்கு  மற்றும் தெற்கு பகுதிகளில் நிலவும் காற்றின் தரம் குறித்த மாறுபாடு மற்றும்  வட சென்னையில் உயிரை மெதுவாக கொள்ளும் காற்றின் தரம் உள்ளிட்டவைகள்  குறித்து பேசப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய தீபக் பில்கி கூறியதாவது: மனிதர்களின் நடவடிக்கைகளில் உள்ளார்ந்த மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், கொள்கையில் வெற்றி பெற வழிவகுக்கும்.

காலநிலை குறித்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனிதர்களின் வாழ்வியல் முறை மற்றும் நடவடிக்கைகளை மாற்றுவது என்பது கடினம் தான் என்றாலும் அது முடியாதது என்று இல்லை. பள்ளி மாணவர்களுக்கு இடையே காலநிலை மாற்றம் குறித்த புரிதல் அதிகரிக்க வேண்டும். அனவருக்கும் காலநிலை குறித்த கல்வி அறிவு பெற வேண்டும். அடுத்த தலைமுறையினர் காலநிலையை சீராக வைப்பதில் தலைமை வகிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: