ஹாலிவுட் நடிகை மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்த ஹாலிவுட் நடிகை சிண்டி வில்லியம்ஸ் (75), கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காலமானார். இந்த நடிகைக்கு, ஜாக், எமிலி ஹட்சன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

‘ஹேப்பி டேஸின் ஸ்பின்ஆஃப்’, ஹிட் காமெடி ‘சிட்காம் லாவெர்ன் அண்ட் ஷெர்லி’யில் பென்னி மார்ஷலின் லாவெர்னுடன் ஷெர்லியாக சிண்டி வில்லியம்ஸ் நடித்து புகழ்பெற்றார். மேலும், கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும், திரைத்துறையினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: