தேசிய கீதம் அவமதிப்பு எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அருகே பொம்மைக்குட்டை மேட்டில், கடந்த 28ம்தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மேடையின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல் ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சிவப்பிரகாசம்(47) எழுந்து நிற்காமல், சேரில் உட்கார்ந்தபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தேசிய கீதத்தை அவமரியாதை செய்த எஸ்எஸ்ஐ சிவபிரகாசத்தை, மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: