முகலிவாக்கம், மதனந்தபுர பகுதிகளில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..!!

சென்னை: சென்னை புறநகரில் உள்ள முகலிவாக்கம், மதனந்தபுர பகுதிகளில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவாக்கப்பட்டு புறநகர் பகுதிகளும் சென்னையில் இணைக்கப்பட்டன. ஆனால் பெருநகரத்திற்கான அடிப்படை கட்டமைப்புகள் புறநகர் பகுதிகளில் மேம்படுத்தப்படவில்லை என்ற புகார் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.

குறிப்பாக போரூர் அடுத்த முகலிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை வசதிகள் மோசமாக உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். முகலிவாக்கம் பிரதான சாலை மதனந்தபுரம் சாலை, மாதா நகர், ராஜா கோபால புறம், பாய் கடை நிறுத்தம், அண்ணா பிரதான சாலை, மணப்பாக்கம் பிரதான சாலை, போன்றவை குண்டும் குழியுமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே சாலைகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். சாலைகள் சேத முற்றிருப்பதாலும், குப்பைகள் தேங்குவதாலும் வாகனங்கள் செல்லும் பொழுது புழுதி பரப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளதாக முதியவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மாநில நெடுஞ்சாலை  துறை மற்றும் பஞ்சாயத்து பராமரிப்பில் உள்ள சாலைகளை சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்கு மற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் சாலை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: