மாநகர போக்குவரத்து கழகத்தில் 2 பேருந்துகளின் தடம் எண் மாற்றம்: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: மாநகர போக்குவரத்து கழகம் பொது மக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.104 சி கட் பேருந்து, தடம் எண்.104 சி என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி பேருந்து, தடம் எண்.104சி.எக்ஸ் என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும்.

The post மாநகர போக்குவரத்து கழகத்தில் 2 பேருந்துகளின் தடம் எண் மாற்றம்: மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: