சில்லறை விற்பனை பொருட்களின் வெளிப்புற கவரிலும் அனைத்து விவரங்கள் கட்டாயம்

புதுடெல்லி: ஒன்றிய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எம்ஆர்பி உட்பட அனைத்து கட்டாய அறிவிப்புக்களையும் நிறுவனங்கள் பாக்கெட்டின் வெளிப்புறத்திலும் குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்ட சில்லறை தொகுப்பில் பொருட்களின் விவரங்கள் குறித்த கட்டாய தகவல்கள் இடம்பெறவில்லை என்பதை அமைச்சகம் கவனித்துள்ளது.

எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட, பல பாக்கெட்டுக்களாக அல்லது பரிசு பொருட்களை கொண்ட பாக்கெட்டுக்களின் வெளிப்புறத்திலும் பொருட்கள் குறித்த அனைத்து விவரங்களையும் நிறுவனங்கள் அச்சிடவேண்டியது கட்டாயமாகும். உற்பத்தியாளர், பேக் செய்பவர், இறக்குமதி செய்பவர்களின் பெயர்கள் மற்றும் முகவரி, இறக்குமதி பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு, நிகர அளவு, உற்பத்தி செய்த தேதி, மாதம் ஆண்டு, காலாவதி தேதி உள்ளிட்டவை மொத்த தொகுப்பின் வெளிப்புற கவரிலும் கட்டாயமாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories: