கடமலைக்குண்டு அருகே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை

வருசநாடு : கடமலைக்குண்டு அருகே குமணந்தொழு ஊராட்சிக்குட்பட்ட சிதம்பரம் விலக்கு மலைக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மயானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் இறந்தவர்களை புதைக்கும் போது பல்வேறு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

   மேலும் மயானத்தில் எரியூட்டும் கொட்டகை, தெருவிளக்கு இல்லாததால், மழைக்காலங்களில் இறந்தவர்களை எரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘‘மூன்று தலைமுறையாக சிதம்பரம் விலக்கு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மயானத்திற்கு எந்தவித அடிப்படை வசதியும் இதுவரை செய்து தரவில்லை. இதனால் எங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மயானத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: