தமிழகத்தில் பிப்.1,2-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கையில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பிப்ரவரி 2-ல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: