பெரம்பலூர் அருகே உணவில் விஷம் கலந்து இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை

குன்னம்: பெரம்பலூர் அருகே உணவில் விஷம் கலந்து கொடுத்து இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெண்ணகோணத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (32). துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராசு என்பது மகள் ஜெயா (27)வுக்கும் 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் நிகிதா, நிகிசா உள்ளனர். குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்புதான், பெண்ணகோணத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை இரண்டு குழந்தைகள் படுக்கையில் இறந்து கிடந்தனர். ஜெயா தூக்கில் பிணமாக கிடந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து, நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்ட, ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் ஜெயாவின், தந்தை செல்வராஜ் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: