கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் போன்ற பட்டயப்படிப்புகளுக்கு 2022-2023ம் கல்வியாண்டிற்கு 2036 விண்ணப்பங்கள் பெறப்பெற்றன. இவற்றில் 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 27ம் தேதி www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு கடந்த 28ம் தேதி துவங்கியது.
இன்று (30ம் தேதி) வரை நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வில் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் மாலை 5 மணிக்குள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாட இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும்.