கோவா அரசு அதிரடி சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க தடை: கடற்கரை, திறந்த வெளியில் மதுஅருந்தவும் கட்டுப்பாடு

பனாஜி: கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க வேண்டாம் எனவும், கடற்கரை, திறந்தவௌிகளில் மது அருந்த வேண்டாம் எனவும் கோவா அரசு அறிவுறுத்தி உள்ளது. கோவா மாநில அரசின் சுற்றுலாதுறை வௌியிட்ட அறிவிப்பில், “கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க விரும்பினால், சுற்றுலா வருபவர்களின் அனுமதி பெற்று செல்பி, புகைப்படங்களை எடுக்க வேண்டும். குறிப்பாக வௌிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சூரிய குளியல், நீச்சல் உள்ளிட்டவற்றை செய்யும்போது அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், பாதுகாக்கவும் நேர்மையற்ற செயல்களால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது. விபத்துகள் நிகழாமல் தடுக்க, கோவா வரும் சுற்றுலா பயணிகள் செங்குத்தான பாறைகள், கடல் பாறைகள், நீர்நிலைகளில் செல்பி எடுக்க தடை விதிக்கப்படுகிறது. கடலோர பகுதிகளுக்கு செல்பவர்கள் அங்குள்ள பாரம்பரிய சின்னங்களை சேதப்படுத்தும், அழிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். கடற்கரை, திறந்தவௌி பகுதிகளில் மது அருந்த கூடாது. அதிக கட்டணம் வாங்கும் தனியார் டாக்சிகளை பயன்படுத்த வேண்டாம். கோவா சுற்றுலா துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓட்டல்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: