இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது

லண்டன்: சீக்கிய பேரரசின் கடைசி மன்னரான துலீப் சிங்கின் மகள் மறைந்த சோபியாவுக்கு நீல வில்லை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஆங்கில பாரம்பரிய தொண்டு நிறுவனம், பாரம்பரிய வரலாற்றை கொண்ட நபர்களுடன் தொடர்புடைய அவர்களின் குடியிருப்பு கட்டிடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை கவுரவிக்கும் வகையில் நீல வில்லை தகடு வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீல வில்லை தகடு, இங்கிலாந்து வாழ் இந்திய இளவரசி சோபியா துலீப் சிங்கின் லண்டன் இல்லத்திற்கு அறிவித்து கவுரவித்துள்ளது.

சோபியா, கடந்த 1900ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்காக போராடியவர். இவர் இங்கிலாந்தில் வாக்களிக்கும் உரிமையை பெற்றவர். பல்வேறு பெண்கள் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தவர். பஞ்சாப் மன்னராக துலீப் சிங் தனது 15வது வயதில் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டு, அவர் மூலமாக உலகப் புகழ் பெற்ற கோகினூர் வைரத்தை இங்கிலாந்து அரசி வசம் ஒப்படைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

Related Stories: