திமுக நிர்வாகிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மதுரை தெற்கு மாவட்டம், உசிலம்பட்டி நகரத்தைச் சேர்ந்த ச.தங்கமலைபாண்டி, எம்.சந்திரன், உசிலம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த இ.சுதந்திரம், எம்.ரவிக்குமார்; தேனி வடக்கு மாவட்டம் தேனி நகரத்தைச் சேர்ந்த டி.பாலமுருகன், பெரியகுளம் நகரத்தைச் சேர்ந்த எஸ்.பி.முரளி, போடி நகரத்தைச் சேர்ந்த மா.வீ.செல்வராஜ் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர். மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: