கடுங்குளிர்,பயணிகள் குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து

சென்னை: கடுமையான குளிர் காரணமாக, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விமானங்களில் பயணிக்கும், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை ஐதராபாத், கொல்கத்தா, இலங்கை செல்லும் ஆகிய 6  விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ பயணிகள் விமானமும், இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ விமானமும், கொல்கத்தாவில் இருந்து அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டன.  

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 2 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, அதிகாலை 3.15 மணிக்கு, புறப்பட்டு செல்லும். அந்த 2 விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.  

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, கடுமையான குளிரால் பயணிகள் வரத்து குறைந்துள்ளது. அதனால் 6 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரிய ரக விமானங்களை தேவையான பயணிகள் இல்லாமல் இயக்க முடியாது” என்று தெரிவித்தார்.

Related Stories: