ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் தேர்தல் ஆணையம் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தொகுதிக்குள் வரும் வாகனங்களை எல்லைகளிலேயே நிறுத்தி 4 நிலை கண்காணிப்பு குழுவினர் தணிக்கை செய்து வருகின்றனர்.

அதேபோன்று தொகுதி முழுவதும் அங்காங்கே வாகனங்களில் 3 பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். வழக்கத்திற்கு மாறான சதேகத்திற்கிடமான பணபரிவர்த்தனைகள் நடந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரைக்கும், பொது கூட்டத்திற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் தொகுதிக்கு வெளியே புறநகர் பகுதிகளில் நிர்வாகிகள் கூட்டங்களை அரசியல் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இதனிடையே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அருந்ததியர் இளைஞர் பேரவை ஆதரவு அளித்துள்ளது. 

Related Stories: