நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கு மேற்பட்டுள்ள தன்னார்வலர்கள்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட குளங்கள் நீர்த்தேக்கங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பணியில் மாவட்ட வனத்துறை, அகத்திய மலை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 7 குழுக்களாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 69 வகை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. நடப்பாண்டு இதன் எண்ணிக்கை 100-ஆக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. பறவை இனங்களை பாதுகாத்திடம் வகையில் குப்பைகள் கொட்டுவதை தடுத்தல் போன்ற விழிப்புணர்வு பிச்சரமும் மேற்கொள்ளப்பட்டன. இதை போல் தூத்துக்குடியில், தென்காசி மாவட்டங்களில் உள்ள குளங்களிலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருக்கிறது.

திண்டிவனத்தில் உள்ள கழுகு ஏரி, ஊசுடு ஏரியில் நாளை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்ற இருக்கிறது. இதற்காக இன்று ஊசுடு பறவைகள் சரணாலயத்தில் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வனத்துறையினர், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் இணைந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மாதிரி கணக்கெடுப்பில் கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகளை கண்டதாகவும், கடந்த ஆண்டை விட பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: