பீகாரில் சிலை கரைப்பு ஊர்வலத்தில் வாலிபர் சுட்டுக் கொலை

பாட்னா: பாட்னாவில் நடந்த சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் வாலிபர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த சரஸ்வதி தேவியின் சிலை கரைப்பு ஊர்வல கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீரஜ் (23) வயது இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்:

பாட்னா போலீஸ் தலைமையகம் அருகே, சரஸ்வதி தேவியின் சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது. சைத்பூர் விடுதியின் மாணவர்கள் குழு கங்கை ஆற்றுக்கு சிலையை எடுத்து சென்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், ஊர்வலத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் ஜெகனாபாத்தைச் சேர்ந்த தீர்ஜ் என்பவர் இறந்தார். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி, அங்கிருந்து தப்பிவிட்டார். முன்விரோதம் காரணமாக துப்பாக்கி சூடு நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.

Related Stories: