ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் கழிவறையை முழுநேரமும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று. இதனால் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் சிறிய அளவிலான கழிவறை உள்ளதால் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த ரயில் நிலையத்தில் போதுமானதாக கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. மேலும் ரயில் நிலையம் வெளியே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கழிவறை கட்டிடம் அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த கழிவறையானது பகல் நேரங்களில் காலை முதல் மாலை வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால் மாலை நேரத்திலும், இரவு நேரங்களிலும் அதிகாலையிலும் ரயிலில் பயணம் செய்ய வருபவர்களும் ரயில் பயணம் முடித்து செல்லும் பயணிகள் கழிவறை மூடப்பட்டுள்ளதால் இயற்கை உபாதைகளை கழிக்க சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலை ஓரங்களிலும் ரயில் தண்டவாள பகுதியிலும் ஆங்காங்கே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. ஒரு சிலர் கழிவறை கட்டிடத்திற்கு சென்று மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஜங்ஷன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையை 24 மணி நேரமும் திறந்திருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: