தெலுங்கில் மீண்டும் காஜல்

ஐதராபாத்: பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன் நடித்த வீர சிம்ஹா ரெட்டி படம் கடந்த 12ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் பெரிய வெற்றி பெற்றதால், இதன் வெற்றி விழாவில் நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்காராவ் போன்ற ஜாம்பவான்களை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார் பாலகிருஷ்ணா.

இந்நிலையில் படத்துக்கான பார்ட்டியில் நடிகை ஹனிரோசுடன் கைகோர்த்தபடி மது அருந்தினார். இதுவும் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றி பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.

அனில் ரவிபுடி இயக்கும் படத்தில்தான் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார். இது அவரது 108வது படமாகும். இதில் பாலய்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் தேர்வாகியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து மணந்தார் காஜல். இப்போது அவர் ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிவிட்டார். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். தமிழில் கோஸ்டி, கருங்காப்பியம் ஆகிய படங்களிலும் காஜல் நடித்து வருகிறார்.

Related Stories: