அதிமுக ஆட்சிமன்ற குழு விரைவில் கூடி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக ஆட்சிமன்ற குழு விரைவில் கூடி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பாக கட்சியினரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறினார்.

Related Stories: