ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர் ஏ.எம். சிவபிரசாத் போட்டி: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர் சிவபிரசாத் போட்டியிட உள்ளதாக அக்கட்சியே பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார் . வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.எம்.சிவபிரசாத் 29 வயதுடைய இளைஞர். ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக சிவபிரசாத் செயல்பட்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளா்கள் உள்ளனா். வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 2-ந் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலுக்கு பல்வேறு காட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. கூட்டணி காட்சிகள் அந்த வேட்பாளராக்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று அறிவித்தார். 29 வயதான ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.எம்.சிவபிரசாத் அமமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் பரப்புரை பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இரட்டை இலையை கேட்பதால் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என டி.டி.வி.தினகரன் கூறினார்.

Related Stories: