வடசென்னையில் ரூ.41.5 லட்சம் செலவில் நிழற்குடைகள், உடற்பயிற்சி கூடம்: எம்பி திறந்து வைத்தார்

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதியில், ரூ.41.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 பேருந்து நிறுத்த நிழற்குடை, உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை கலாநிதி வீராசாமி எம்பி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.31.5 லட்சத்தில், காசிமேடு சூரிய நாராயணர் தெரு, வண்ணாரப்பேட்டை மகாராணி திரையரங்கம் அருகில், வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகில் என 3 இடங்களிலும்  பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதேபோல், புதுவண்ணாரப்பேட்டை திருவள்ளுவர் குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் ரூ.9.50 லட்சம் செலவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் கட்டுவதற்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, இந்த 2 பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு 3 பேருந்து நிறுத்த நிழற்குடை மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  

நிகழ்ச்சியில், ஆர்கே நகர் எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர், சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் லட்சுமணன், மாவட்ட அவை தலைவர் வெற்றிவீரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதுகனேஷ், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் குமாரி நாகராஜ், ரேணுகா வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: