சென்னை: மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி அருகே துணை தபால் நிலையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சுமன் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை 9 மணிக்கு தபால் நிலையத்தை திறக்க வந்தபோது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.1400 திருடு போனது தெரிந்தது.