கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை:துரைப்பாக்கம் கண்ணகி நகர் பேருந்து நிலையம் பின்புறம் கடந்த 2019 பிப்ரவரியில் கஞ்சா விற்ற, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (25) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தமிழரசனை கைது செய்து அவர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் தமிழரசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: