ஜூடோ ரத்தினம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ் திரையுலகத்தில் மூத்த சண்டை பயிற்சி கலைஞர்  ஜூடோ ரத்தினம் மறைவு தமிழ் திரையுலகத்திற்கும், சண்டை பயிற்சி கலைஞர்களுக்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக கலைஞர்களுக்கும்  ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: