கோயில்களில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். முதலில் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்தார். இதன்பிறகு திருவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோயிலான வனபேச்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் எனது சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். வேட்பு மனுவே 31ம் தேதி முதல்தான் துவங்க உள்ளது’’  என்றார்.

Related Stories: