ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான, 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.A. செங்கோட்டையன், M.L.A., தலைமையில், கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் கே.பி. முனுசாமி, M.L.A., திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., முன்னாள் அமைச்சர்C. பொன்னையன், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் மு. தம்பிதுரை, M.P., பி. தங்கமணி, M.L.A., முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி, முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A.,  முன்னாள் அமைச்சர் D. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் C.Ve. சண்முகம், M.P., முன்னாள் அமைச்சர் செ. செம்மலை, முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம், M.L.A., முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, முன்னாள் அமைச்சர் செல்லூர் K. ராஜூ, M.L.A.,  தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் ப. தனபால், M.L.A.,  K.P. அன்பழகன், M.L.A., மேலும் பலர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: