துபாயில் ஆடம்பர ரிசார்ட் திறப்பு: அமெரிக்க பாப் பாடகிக்கு 24 மில்லியன் டாலர் சம்பளம்

துபாய்: துபாயில் புதியதாக திறக்கப்பட்ட  ஆடம்பர ரிசார்ட் திறப்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க பாப் பாடகிக்கு 24 மில்லியன் டாலர் சம்பவளம் வழங்கப்பட்டது. துபாயில் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்ட அட்லாண் டிஸ் ராயல்ஸ் ரிசார்ட்டின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. 43 மாடிகள் கொண்ட இந்த ரிசார்ட்டில் 90 நீச்சல் குளங்கள் உள்ளன. ஆலிவ் மரங்கள் கூட ஓட்டல் வளாகத்தில் உள்ளன. ரிசாரட்டின் திறப்பு விழா இசை நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் நட்சத்திரம் பியான்ஸே பங்கேற்றார்.

இதற்காக பியான்ஸேவுக்கு 24 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. இந்த ரிசார்ட்டில் தங்குவதற்கான முன்பதிவு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்குகிறது. துபாயின் மிகவும் ஆடம்பரமான இந்த ரிசார்ட்டில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு 1,00,000 அமெரிக்கன் டாலர் வாடகையாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: