சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆளுநரின் செயல்பாடுகள் சட்டத்துக்கு புறம்பானவையாக உள்ளதால் அவரது அழைப்பை புறக்கணிக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
