புதுடெல்லி: ஆளும் பாஜகவுக்கு மூன்று ‘பி’ டீம்கள் உள்ளன என்றும், அவை எந்தெந்த கட்சிகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் நடைபயணத்திற்கு, வெளியில் இருந்து தொண்டர்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்று காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவரது புதிய கட்சியை இன்னும் பதிவு செய்யப்படாததால் வருத்தத்தில் உள்ளார்.
