விமானத்தை போல மும்பை ரயிலில் தட்கல் கட்டணம்

நெல்லை: தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா என தொலைதூரங்களுக்கு பயணிப்ேபார், அவசரமாக செல்ல ரயில்களில் தட்கல் டிக்கெட்டுகளை நாடுவது வழக்கம். பிரிமியம் தட்கல் முறையை ரயில்வே கொண்டு வந்த நாளில் இருந்து, தட்கல் டிக்கெட்டுகளை பெற்று சாமானியர்கள் பயணிக்க முடியாது என்ற நிலை நிலவுகிறது/ மும்பையில் இருந்து ரேணுகுண்டா வழியாக நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரசில் (எண்.16351) சமீபத்தில் மும்பையில் இருந்து மதுரை வருவதற்கு ஒருவர் ஸ்லீப்பர் கட்டணமாக ரூ.2050ஐ செலுத்தியுள்ளார். அதே ரயிலில் ரூ.3 ஆயிரம் செலுத்தி மதுரை வந்தவர்களும் உள்ளனர்.

 

ஏசி பெட்டிகள் என்றால் பிரிமியம் தட்கல் டிக்கெட்டுகள் ரூ.5 ஆயிரத்தை தாண்டி செல்கின்றன. விமான கட்டணங்களுக்கு இணையாக ரயில் கட்டணங்கள் உள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். இதுகுறித்து மும்பை தமிழினி பயணிகள் சங்க பொதுசெயலாளர் அப்பாத்துரை கூறுகையில், ‘‘பிரிமியம் தட்கல் என்பது பயணிகளிடம் மறைமுகமாக நடத்தப்படும் கொள்ளையாக தெரிகிறது. எனவே தென்மாவட்டங்களில் இருந்து மும்பை கூடுதல் ரயில்களை இயக்குவதோடு, நியாயமான கட்டணத்தையும் வசூலிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: