பிரேசில் கலவரம் எதிரொலி; ராணுவ தளபதி டிஸ்மிஸ்: பிரதமர் அதிரடி நடவடிக்கை

பிரேசிலியா: பிரேசில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், கடந்த சில வாரங்களாக தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கலவரமாக மாறியதால் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதால், அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜூலியோ சீசர் டி அரூடாவை, தற்போதைய பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர் போல்சனாரோ பதவிகாலம் முடிய இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். அதற்குள் அவரது பதவிபறிபோனது. அவருக்குப் பதிலாக தென்கிழக்கு ராணுவத் தளபதி தாமஸ் ரிபெய்ரோ பைவா நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: