நியூசிலாந்து பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

வெலிங்டன்: நியூசிலாந்து புதிய பிரதமராக கல்வி அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பிப்.7ம் தேதி வரை பதவியில் இருப்பதாக தெரிவித்த அவர் புதிய பிரதமர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து புதிய பிரதமராக கல்வித்துறை அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பிப்.8ம் தேதி பதவி ஏற்க உள்ளார். 44 வயதான ஹிப்கின்ஸ் வசம் காவல்துறை, பொதுச்சேவை, அவைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: