குஜராத் தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கை; காங்கிரசில் 37 நிர்வாகிகள் சஸ்பெண்ட்: பொது செயலாளர் அறிவிப்பு

புதுடெல்லி: குஜராத் தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 37 நிர்வாகிகளை காங்கிரஸ் கட்சி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 50 நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் எஸ்சி மற்றும் எஸ்டிக்காக ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்குவார்கள். மேலும் குஜராத் சட்டசபை தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 95 தலைவர்கள் மீது 71 புகார்கள் வந்துள்ளன. எட்டு மூத்த நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: